Saturday, November 8, 2008
உறுதி கொடு
சற்றும் மனம் தளராமல்
பூத்துக்காய்த்துக்கொண்டே இருக்கும்
செடியை போல
கிளை வேரை வெட்ட வெட்ட
சற்றும் துயர் அடையாமல்
வளர்ந்து கொண்டே இருக்கும்
மரத்தை போல
ஆதாரத்தை மாற்ற மார்ர்ர்ர்
சற்றும் சலிப்பு அடையாமல்
கிடைத்ததைப்பற்றி முன்னேறிக்கொண்டே இருக்கும்
கொடியை போல
எதை இழந்தாலும்
எது நடந்தாலும்
எது மாறினாலும்
முன்னேற மட்டுமே சிந்திக்க செயலாற்ற
உறுதி கொடு
இறைவா!
இறுதி வரை உறுதி கொடு!
-------------------------------------------
நகுலன்
விதைத்ததெல்லாம் முளைப்பதில்லை
முளைத்ததெல்லாம் வளர்வதில்லை
வளர்ந்ததெல்லாம் பூப்பதில்லை
பூத்ததெல்லாம் காய்ப்பதில்லை
காய்த்ததெல்லாம் பழுப்பதில்லை
பழுத்ததெல்லாம் பிழைப்பதில்லை
பிழைத்ததெல்லாம் விதையாவதில்லை
விதைத்ததெல்லாம் முளைப்பதில்லை
வாழ்க்கை என்னும் நாடகத்தில்
அடுத்த கட்டம் யாரிடத்தில்?
என்ன நடக்கும் எது நடக்கும் என்று
தவறவிட்டார் பொன்னான நாள் இன்று
வருந்துபவர் உணருவதில்லை
உணர்ந்தவர் வருந்துவதில்லை
இறை எதுவாயினும் சேர்மின்!
நிறையான வாழ்க்கை கொண்மின்!
--------------------------------------------------------
நகுலன்
Wednesday, October 1, 2008
பெண் சிசு வதை
மண் ஒரு துணை
மனித இனம் பெருக
பெண் உறுதுணை
பெண் சிசு வதை
மனிதன் தனக்கிடும் சிதை
அர்த்தமின்றி பெருகும்
உயிர்க்கொல்லி நோய்
சத்தமின்றி கருகும்
இளம் பயிர் பல சேய்!
Saturday, September 20, 2008
உடல்
உண்மையில் மிகப்பெரிய பாரம்
உடல் இன்றி உயிர் என்ன செய்யும்?
யாரும் அறியார்
உயிர் இன்றி உடல் என்ன ஆகும்?
யாவரும் அறிவார்
உடலின் பெரும் பாகம் அறிவோம்
உயிரின் ஒரு பாகம் கூட அறியோம்
உடலை இய்க்கும் உயிர்
உயிரை இயக்குவது கர்ம விதியோ?
இல்லை இறைவனோ?
இல்லை அவனின் பிரதிநிதியோ?
எப்பொழுது உடலைப்புகும்
எப்பொழுது உடலைவிடும்
தற்பொழுது அறியான் மனிதன்
முப்பொழுதும் அறிவான் புனிதன்
-------------------------------------------
நகுலன்
உலகம் ஒரு நாடக மேடை
உலகம் ஒரு நாடக மேடை
உணர்ந்தவர் நிச்சயம் ஒரு மேதை
உள்ளளவும் ஐயம் இல்லை
உண்மையே அன்றி வேறு இலலை
தன்னில் தன்னை உணர்ந்த முதல்
தன்னை முற்றும் உணரும் வரை
ஒவ்வொருவனும் நடிக்கிறான்
உண்மை உருவை மறைக்கிறான்
எதை எதுவிடமிருந்து காப்பாற்ற
உலகிற்கு எதை பறைசாற்ற
மனிதன் நடிக்க முயல்கிறான்
முடிவில் மீண்டும் மீண்டும் உழல்கிறான்
என்ன இழக்கக்கூடாதென்றும்
எதைப் பெறுவதற்காக வென்றும்
மனிதன் சாயம் பூச நினைக்கிறான்
முடிவில் சாயம் பூசப்பட்டு தவிக்கிறான்
மண்ணில் விழுந்தவுடன் அழுகை
பரிதாபம் பெறுவதற்கான செய்கை?
உண்ணுவதும் உறங்குவதும் சில காலம்
இன்னொரு முறை ஏமாறும் ஞாலம்?
முதலில் பெற்றோரிடம் பயிற்சி
பிறகு மற்றோரிடம் முயற்சி
சந்தர்ப்பங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை
வெட்கம் கூச்சம் கொஞ்சமும் இல்லை
கண்டதை காணாதது போலும்
கேளாததை கேட்டது போலும்
உணராததை உணர்ந்தது போன்று
அறியாததை அறிந்தது போன்று
நடிப்பதில் தன்னையே மறக்கிறான்
உண்மை வெளிவராதென்று மகிழ்கிறான்
உண்மையில் ஒருவன் கணக்கு எடுக்கிறான்
கணக்கிற்கு ஏற்ற படி மறுபிறவி கொடுக்கிறான்!
----------------------------------------------
நகுலன்
Thursday, September 18, 2008
எது சைவம் எது அசைவம்?
எக்காரணம் கொண்டும் உண்ணவில்லை அசைவம்
பள்ளியில் கற்றிருக்கிறேன்
பெற்றோர் சொல்ல கேட்டிருக்கிறேன்
அசைவம் உண்பது ஆகாது
மற்றொரு உயிரை துன்புறுத்தல் கூடாது
காய் கனிகள்
மற்றும் கீரை வகைகள்
அரிசி பருப்பு கோதுமை
பால் தயிர் வெண்ணை நெய்
இவையே பிரதான உணவு
உயிர் வதை இல்லை - மன நிறைவு
மண்ணை உழும் ஏர்
மடியும் உயிர் பல நூறு
நட்ட நாற்று நன்றாக வளர
சாகுபடி மேலும் வளர
மூட்டை மூட்டையாய் எரு
போயிற்று பல உயிர் தெரியாமல் உரு
பயிர் வளம் உயர
களை பல மடிய
ஒவ்வொரு தானியமும்
காயும் கனியும்
உண்ண உணவும் ஆகிறது
பயிரிட்டால் விளைச்சலையும் பெருக்குகிறது
பிராணிகளுக்கென்று ஒரு சட்டமா?
தாவரங்களெல்லாம் என்ன மட்டமா?
குழம்பியது என் மனம்
எது சைவம் எது அசைவம்?
-----------------------------------------------------
நகுலன்
சுவாசிக்கும் காற்று வேறு இல்லை
எண்ணம் செயலில் வேற்றுமை இல்லை
பிறப்பில் இறப்பில் மாற்றம் இல்லை
மனம் போகும் போக்கில் பேடகம் இல்லை
உண்ணும் உணவில் வேற்றுமை உண்டு
புறத்தில் நிறத்தில் வித்தியாசம் உண்டு
மொழியில் பேச்சில் பிரிவு உண்டு
மதத்தில் இறை நம்பிக்கையில் வேடகம் உண்டு
இறைவன் மனிதனாய் உருவெடுத்தான்
அன்பும் அறமும் போதித்தான்
போதனையின் சாரம் அதை மறந்த மனிதன்
அவ்வுருவை தெய்வமாக்கினான்
மதங்கொண்டு மதம் படைத்தான்
அவ்வேற்றுமையால் பல போர் வளர்த்தான்
குணம் கெட்டு மதியும் இழந்தான்
இறைக்கு தன்னையே இரை ஆக்கினான்
இறைவன் எங்கும் எதிலும் உளன் , சொன்னவர் பலர்
உன்னிலும் உள்ளான் அவன், இதை நீ உணர்
எல்லா உயிரிலும் அன்பு செலுத்து
இறையை சேர்வது உன் தலை எழுத்து
----------------------------------------------
nakulan