Saturday, September 5, 2009

நான் குற்றவாளியா ?

ஒரு மாலைப் பொழுது
நண்பனுடன் காற்றாட சென்ற பொழுது
பறக்க இயலாவாத்து ஒன்று
பின் தொடர்ந்த பசித்த பூனை ஒன்று
சினங்கொண்ட நண்பன்
பூனை மேல் கல்லெறிய முனைய
அவன் கை பற்றி சற்றே வினவினேன்
படைத்தவன் தோட்டத்தில்
இயற்கையின் விளையாட்டை
நாம் தடுப்பது முறையோ?
பூனை பசித்து துவண்டால்தகுமோ?
வாத்து தான் மாண்டால் தகாதோ?
பசித்தது புசிக்க நினைப்பது அதன் குற்றமா?
தப்ப இயலாத நிலை தான் வாத்தின் குற்றமா?
நண்பனை தடுத்த நான் தான் குற்றவாளியா?

அதுவும் அவனும்

ஒரு த்வாரமும் தோன்றாமுன் அது தோன்றி

ஐம்புலனும் தோன்றிய பின் உள்ளே ஊன்றி

அறியும் அதுவும் எதுவும் அசையாது அவன் அன்றி

அடையும் அது அதை இழந்து அவன் சரணை,அவனில் ஒன்றி