Wednesday, October 1, 2008
பெண் சிசு வதை
மண் ஒரு துணை
மனித இனம் பெருக
பெண் உறுதுணை
பெண் சிசு வதை
மனிதன் தனக்கிடும் சிதை
அர்த்தமின்றி பெருகும்
உயிர்க்கொல்லி நோய்
சத்தமின்றி கருகும்
இளம் பயிர் பல சேய்!
Saturday, September 20, 2008
உடல்
உண்மையில் மிகப்பெரிய பாரம்
உடல் இன்றி உயிர் என்ன செய்யும்?
யாரும் அறியார்
உயிர் இன்றி உடல் என்ன ஆகும்?
யாவரும் அறிவார்
உடலின் பெரும் பாகம் அறிவோம்
உயிரின் ஒரு பாகம் கூட அறியோம்
உடலை இய்க்கும் உயிர்
உயிரை இயக்குவது கர்ம விதியோ?
இல்லை இறைவனோ?
இல்லை அவனின் பிரதிநிதியோ?
எப்பொழுது உடலைப்புகும்
எப்பொழுது உடலைவிடும்
தற்பொழுது அறியான் மனிதன்
முப்பொழுதும் அறிவான் புனிதன்
-------------------------------------------
நகுலன்
உலகம் ஒரு நாடக மேடை
உலகம் ஒரு நாடக மேடை
உணர்ந்தவர் நிச்சயம் ஒரு மேதை
உள்ளளவும் ஐயம் இல்லை
உண்மையே அன்றி வேறு இலலை
தன்னில் தன்னை உணர்ந்த முதல்
தன்னை முற்றும் உணரும் வரை
ஒவ்வொருவனும் நடிக்கிறான்
உண்மை உருவை மறைக்கிறான்
எதை எதுவிடமிருந்து காப்பாற்ற
உலகிற்கு எதை பறைசாற்ற
மனிதன் நடிக்க முயல்கிறான்
முடிவில் மீண்டும் மீண்டும் உழல்கிறான்
என்ன இழக்கக்கூடாதென்றும்
எதைப் பெறுவதற்காக வென்றும்
மனிதன் சாயம் பூச நினைக்கிறான்
முடிவில் சாயம் பூசப்பட்டு தவிக்கிறான்
மண்ணில் விழுந்தவுடன் அழுகை
பரிதாபம் பெறுவதற்கான செய்கை?
உண்ணுவதும் உறங்குவதும் சில காலம்
இன்னொரு முறை ஏமாறும் ஞாலம்?
முதலில் பெற்றோரிடம் பயிற்சி
பிறகு மற்றோரிடம் முயற்சி
சந்தர்ப்பங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை
வெட்கம் கூச்சம் கொஞ்சமும் இல்லை
கண்டதை காணாதது போலும்
கேளாததை கேட்டது போலும்
உணராததை உணர்ந்தது போன்று
அறியாததை அறிந்தது போன்று
நடிப்பதில் தன்னையே மறக்கிறான்
உண்மை வெளிவராதென்று மகிழ்கிறான்
உண்மையில் ஒருவன் கணக்கு எடுக்கிறான்
கணக்கிற்கு ஏற்ற படி மறுபிறவி கொடுக்கிறான்!
----------------------------------------------
நகுலன்
Thursday, September 18, 2008
எது சைவம் எது அசைவம்?
எக்காரணம் கொண்டும் உண்ணவில்லை அசைவம்
பள்ளியில் கற்றிருக்கிறேன்
பெற்றோர் சொல்ல கேட்டிருக்கிறேன்
அசைவம் உண்பது ஆகாது
மற்றொரு உயிரை துன்புறுத்தல் கூடாது
காய் கனிகள்
மற்றும் கீரை வகைகள்
அரிசி பருப்பு கோதுமை
பால் தயிர் வெண்ணை நெய்
இவையே பிரதான உணவு
உயிர் வதை இல்லை - மன நிறைவு
மண்ணை உழும் ஏர்
மடியும் உயிர் பல நூறு
நட்ட நாற்று நன்றாக வளர
சாகுபடி மேலும் வளர
மூட்டை மூட்டையாய் எரு
போயிற்று பல உயிர் தெரியாமல் உரு
பயிர் வளம் உயர
களை பல மடிய
ஒவ்வொரு தானியமும்
காயும் கனியும்
உண்ண உணவும் ஆகிறது
பயிரிட்டால் விளைச்சலையும் பெருக்குகிறது
பிராணிகளுக்கென்று ஒரு சட்டமா?
தாவரங்களெல்லாம் என்ன மட்டமா?
குழம்பியது என் மனம்
எது சைவம் எது அசைவம்?
-----------------------------------------------------
நகுலன்
சுவாசிக்கும் காற்று வேறு இல்லை
எண்ணம் செயலில் வேற்றுமை இல்லை
பிறப்பில் இறப்பில் மாற்றம் இல்லை
மனம் போகும் போக்கில் பேடகம் இல்லை
உண்ணும் உணவில் வேற்றுமை உண்டு
புறத்தில் நிறத்தில் வித்தியாசம் உண்டு
மொழியில் பேச்சில் பிரிவு உண்டு
மதத்தில் இறை நம்பிக்கையில் வேடகம் உண்டு
இறைவன் மனிதனாய் உருவெடுத்தான்
அன்பும் அறமும் போதித்தான்
போதனையின் சாரம் அதை மறந்த மனிதன்
அவ்வுருவை தெய்வமாக்கினான்
மதங்கொண்டு மதம் படைத்தான்
அவ்வேற்றுமையால் பல போர் வளர்த்தான்
குணம் கெட்டு மதியும் இழந்தான்
இறைக்கு தன்னையே இரை ஆக்கினான்
இறைவன் எங்கும் எதிலும் உளன் , சொன்னவர் பலர்
உன்னிலும் உள்ளான் அவன், இதை நீ உணர்
எல்லா உயிரிலும் அன்பு செலுத்து
இறையை சேர்வது உன் தலை எழுத்து
----------------------------------------------
nakulan
எண்ண அலைவரிசை
பூங்காவில் நான்
கரம், வானொலிப்பெட்டியுடன்
சிரம், வானத்தை நோக்கி
சிந்தனை உலகச் செய்திகளுடன்
எனை மறந்து நடந்தேன்....
ஒரு புறம்
யுத்தத்தின் மேல் உள்ள பித்தத்தால்,
தற்கொலைப் படைகளின் தாக்குதலால்
மனிதன்
மனிதத்தை அழிக்கிறானே என்றும்
மறுபுறம்
புயலினால்
மழையினால்
வெயிலினால்
பூகம்பத்தினால்
எரிமலை வெடிப்பினால்
பூமியை சீன்றும் இயற்கை
மனிதனின் ஆதிக்கத்தை
சோதிக்கின்றதே என்றும்
வருத்தம் சித்தத்தை தாக்க
சற்றே நடந்த பாதையை நோக்கினேன்
தாங்கள் அழிக்கப்பட்டதை
சிதைக்கப்பட்டதை
வேரோடு பிடுங்கப்பட்டதை
தெரிவிக்க இயலாமல்
உள்ளே அழுது
வெளியே வாடிக்கொண்டு
மடிந்து கொண்டிருந்த
பூக்கள்
செடிகள்
பூச்சிகள் மற்றும்
பல சின்னஞ்சிறு உயிர்கள்
ஒரு நொடி
மனது வருத்தம் கொள்ள
மறு நொடி
அதனால் என்ன?
நமக்காக தானே இவைகள்
என அறிவு எடுத்துச்சொல்ல
வானொலியை மற்றொரு அலைவரிசைக்கு
மாற்றினேன்
வீட்டை நோக்கி நடந்தபடி!
---------------------------------------
நகுலன்