உலகம் ஒரு நாடக மேடை
உணர்ந்தவர் நிச்சயம் ஒரு மேதை
உள்ளளவும் ஐயம் இல்லை
உண்மையே அன்றி வேறு இலலை
தன்னில் தன்னை உணர்ந்த முதல்
தன்னை முற்றும் உணரும் வரை
ஒவ்வொருவனும் நடிக்கிறான்
உண்மை உருவை மறைக்கிறான்
எதை எதுவிடமிருந்து காப்பாற்ற
உலகிற்கு எதை பறைசாற்ற
மனிதன் நடிக்க முயல்கிறான்
முடிவில் மீண்டும் மீண்டும் உழல்கிறான்
என்ன இழக்கக்கூடாதென்றும்
எதைப் பெறுவதற்காக வென்றும்
மனிதன் சாயம் பூச நினைக்கிறான்
முடிவில் சாயம் பூசப்பட்டு தவிக்கிறான்
மண்ணில் விழுந்தவுடன் அழுகை
பரிதாபம் பெறுவதற்கான செய்கை?
உண்ணுவதும் உறங்குவதும் சில காலம்
இன்னொரு முறை ஏமாறும் ஞாலம்?
முதலில் பெற்றோரிடம் பயிற்சி
பிறகு மற்றோரிடம் முயற்சி
சந்தர்ப்பங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை
வெட்கம் கூச்சம் கொஞ்சமும் இல்லை
கண்டதை காணாதது போலும்
கேளாததை கேட்டது போலும்
உணராததை உணர்ந்தது போன்று
அறியாததை அறிந்தது போன்று
நடிப்பதில் தன்னையே மறக்கிறான்
உண்மை வெளிவராதென்று மகிழ்கிறான்
உண்மையில் ஒருவன் கணக்கு எடுக்கிறான்
கணக்கிற்கு ஏற்ற படி மறுபிறவி கொடுக்கிறான்!
----------------------------------------------
நகுலன்
No comments:
Post a Comment