சிறு வயது முதல் நான் சைவம்
எக்காரணம் கொண்டும் உண்ணவில்லை அசைவம்
பள்ளியில் கற்றிருக்கிறேன்
பெற்றோர் சொல்ல கேட்டிருக்கிறேன்
அசைவம் உண்பது ஆகாது
மற்றொரு உயிரை துன்புறுத்தல் கூடாது
காய் கனிகள்
மற்றும் கீரை வகைகள்
அரிசி பருப்பு கோதுமை
பால் தயிர் வெண்ணை நெய்
இவையே பிரதான உணவு
உயிர் வதை இல்லை - மன நிறைவு
மண்ணை உழும் ஏர்
மடியும் உயிர் பல நூறு
நட்ட நாற்று நன்றாக வளர
சாகுபடி மேலும் வளர
மூட்டை மூட்டையாய் எரு
போயிற்று பல உயிர் தெரியாமல் உரு
பயிர் வளம் உயர
களை பல மடிய
ஒவ்வொரு தானியமும்
காயும் கனியும்
உண்ண உணவும் ஆகிறது
பயிரிட்டால் விளைச்சலையும் பெருக்குகிறது
பிராணிகளுக்கென்று ஒரு சட்டமா?
தாவரங்களெல்லாம் என்ன மட்டமா?
குழம்பியது என் மனம்
எது சைவம் எது அசைவம்?
-----------------------------------------------------
நகுலன்
Thursday, September 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment