இமய மலையில்
சம்மணம் இட்டு அமர்ந்து
கண்கள் மூடி
முடி வளர்த்து
ஊனை வருத்தி
உலகரியாமல்
கிடப்பது மட்டுமல்ல
தவம்
எடுத்த காரியம் எதுவாயினும்
அது முழுதும் நிறைவேற
சித்தம் சிறிதும் விலகாமல்
பசி தாகம் மறந்து
கடமையே கண்ணாக
இருப்பதுவும்
தவம் தான்
அதுவும்
தன்னலம் பாராமல்
பிறர் நலம் பேணி
நன்மையே எண்ணி
செய்யும் ஒவ்வொரு செயலும்
சிறந்த தவம்
இவ்வகையில் தாய்மையே
ஒப்பற்ற தவம்!
-------------------------------
நகுலன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment