கரு சுமந்து
உரு கொடுத்து
பாலூட்டி
சீராட்டிய தாய்
உயிர் கொடுத்து
ஆசானாய் இருந்து
வழி நடத்தி
சபை நிறுத்திய தந்தை
பிழை பொறுத்து
அறிவு கொடுத்து
பண்பு வளர்த்து
உதாரணம் காட்டிய ஆசான்
இடம் கொடுத்து
இல் அமைத்து
பேரு வழங்கி
ஆசி அருளிய இறை
இம்மூன்று குயவரும்
அவரைப் படைத்த தூயவரும்
உருவாக்கிய பொம்மை இங்கே
தேடியது அந்த 'நான்' எங்கே?
-------------------------------------
நகுலன்
No comments:
Post a Comment